Monday, 23 January 2012

எதையும் விட


படித்த எந்தக் கவிதையையும் விட
எழுதிய எந்தக் கதையையும் மீறி
பாம்புகள் உலாவும் கிணற்றில்
ஒளியுண்ட வெள்ளி நீரில்
எல்லையற்ற ஆவலுடன்
மெல்லிய சிரிப்பில்
ஒருமித்து மிதந்தது
இன்பம் அளிக்கிறது




சிவகாமி